திருமலை அகரம் விஸ்வநாதர் கோவில் புனரமைக்கப்படுமா?



 பெண்ணாடம்; திருமலை அகரம் விஸ்வநாதர் கோவிலை புனரமைக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. கோவிலில், சிவன், விஷ்ணு மற்றும் விசாலாட்சி அம்மன் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவிலில் விநாயகர், முருகன், கால பைரவர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். பராமரிப்பின்றி உள்ள இக்கோவில் பாழடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, அரச மரக்கன்றுகள் வளர்ந்து, சுற்றிலும் முட்புதர்கள் மண்டி, கோபுர சிலைகளும் உடைந்துள்ளன. இங்கு தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடக்கிறது.

கோவிலை புனரமைக்கக் கோரி கிராம மக்கள் பலமுறை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. ஆனால் கடந்த, 3 மாதங்களுக்கு முன் சுற்றுச்சுவர் பணிகள் துவங்கியது. அதில், மூன்று புறம் மட்டும் சுற்றுச்சுவர் கட்டி எழுப்பப்பட்டது. எனவே, திருமலை அகரத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வநாதர் கோவிலை புனரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்