விழுப்புரம்: கோலியனுார் பூமி, நீலா தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், ஏகாதசி வழிபாடு நடந்தது.
அதனையொட்டி நேற்று மதியம் 3:30 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் பெருமாள் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உள் புறப்பாடு நடந்தது. பின், அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து, அர்ச்சனை, தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.