முக்கூடல் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா



புதுச்சேரி: கனகன் ஏரி, சத்தியசாய் நகரில் உள்ள முக்கூடல் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 24ம் தேதி முக்கூடல் ராஜகணபதி சுவாமிக்கு, கணபதி ேஹாமம், நவகிர ஹோமம், மகாலட்சுமி ேஹாமம் மற்றும் முதற்கால யாக பூஜை நடந்தது. மறுநாள் காலை இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி மற்றும் யாத்ராதானம் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடாகி விமானத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகத்தை தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. இவ்விழாவில், அழகானந்தம் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்