அரண்மனைப்புதுார் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் ஜூலை 5ல் கும்பாபிஷேகம்



திருப்பூர்: திருப்பூர், ஷெரீப் காலனி அடுத்த அரண்மனைப்புதுார் முதல் வீதியில் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஸ்ரீஅன்பு விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன், நடுப்பங்கு ஸ்ரீகருப்பராயன், ஸ்ரீகன்னிமார் தெய்வங்கள் அமர்ந்து ஆட்சி புரிகின்றனர். அரண்மனைப்புதுாரின் காவல் தெய்வமாய் விளங்கும் இக்கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று வரும் ஜூலை 5-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரின் பங்களிப்போடு கும்பாபிஷேக விழா கமிட்டி இதற்கானஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


விழா நிகழ்ச்சி நிரல் ஜூலை 1: விநாயகர் வழிபாடு, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் விழா துவங்குகிறது.


ஜூலை 2: சாந்தி ஹோமங்கள் மற்றும் ஷெரீப் காலனி விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்தக்குடம் எடுத்து வருதல்.


ஜூலை 3: யாகசாலை அமைத்தல், கோபுர கலசங்கள் வைத்தல் மற்றும் மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக வேள்வி துவக்கம்.


ஜூலை 4: காலை இரண்டாம் கால யாக வேள்வி, மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை மூன்றாம் கால யாக வேள்வி.


ஜூலை 5: அதிகாலை 4:00 மணி – நான்காம் கால யாகசாலை பூஜைகள்.


காலை 6:00 மணி – ஸ்ரீ அன்பு விநாயகர், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் தெய்வங்களுக்குக் கும்பாபிஷேகம்.


காலை 9:45 மணி – ஸ்ரீ மாகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம், தொடர்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை.


முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை – நடுப்பங்கு தோட்டத்தில் அன்னதானம்.


மாலை 5:00 மணி – ஸ்ரீ மாகாளியம்மன் திருவீதி உலா.


ஏற்பாடுகளை கும்பாபிேஷக விழா கமிட்டியினர் தலைமையில் அரண்மனைப்புதுார் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்