சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று முதல் ஜூலை 9ம் தேதி வரை கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விஜயயாத்திரை மேற்கொள்கிறார். வரும், 30ம் தேதி கர்நாடக மாநிலம், பெங்களூர் புறநகர் பகுதிகளில் யாத்திரை செய்த பின், ஆந்திராவில் யாத்திரை மேற்கொள்கிறார். அடுத்த மாதம், 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை கம்மம் நகரிலும், தொடர்ந்து, கவுரிபிடனுார், நெலமங்களா வழியாக 9ம் தேதி சிருங்கேரி திரும்பும் சுவாமிகள், யாத்திரையின் போது, பல கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்து அருள்கிறார் என, சிருங்கேரி திருமடத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. – நமது நிருபர் –: