திருப்பூர்: திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் 2வது வீதியில் உள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக, 4ம் ஆண்டு விழா, 32ம் ஆண்டு தொட்டப்ப பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
கடந்த 24ம் தேதி கொடிமுடி சென்று காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது; 25ம் தேதி மைசூரு சுற்றுப்பகுதிகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. கடந்த 26ம் தேதி, பிரிட்ஜ்வே காலனி பாலமுருகன் கோவிலில் இருந்து, வீரக்குமாரர்கள் அலகு சேவையுடன், சக்தி சாமுண்டி கலச தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
நேற்று அதிகாலை, ேஹாம பூஜைகளை தொடர்ந்து, சவுடேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, தீர்த்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் இருந்து, ராகு தீபம் அழைத்து வரப்பட்டது.
மதியம், 12:00 மணிக்கு, அம்மனுக்கு சர்வ அலங்கார பூஜை, பெரிய பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலாவும், மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றது.