ரிஷிவந்தியம்: கீழ்பாடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா, திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாரியம்மன் சுவாமியை தேரில் எழுந்தருள செய்த பிறகு திருவிழா துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து முக்கிய தெருக்கள் வழியாக இழுத்து சென்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்தனர்.