கள்ளக்குறிச்சி முருகன் கோவில்களில் தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முருகன் கோவில்களில் சுவாமிக்கு, தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.


கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் வள்ளி தெய்வானை சமேத செந்தில் ஆண்டவருக்கு தேய்பிறை சஷ்டியையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வாணை செந்தில் ஆண்டவ பெருமானுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதேபோல் இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சஷ்டி சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாடி  தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்