உத்திரிய மாதா தேவாலய கொடியேற்றம் மும்பை பக்தர்கள் குவிந்தனர்



நாகப்பட்டினம்; நாகை அடுத்த வேளாங்கண்ணியில் மும்பை பக்தர்களால் நடத்தப்படும் உத்திரிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழ்திசை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும் ஆரோக்கிய மாதா தேவாலய எதிர்புறத்தில், தனி சன்னதியில் உத்திரிய மாதா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தேவாலய ஆண்டுத் திருவிழாவிற்காக வேரைங்கண்ணியில் முகாமிடும் மும்பை, வசாப் மீனவர்கள் 10 நாட்கள் விரதமிருந்து, உத்திரியமாதா ஆண்டுத்திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மும்பை பக்தர்கள் கொடியை முக்கிய வீதிகள் வழியாக பவனியாக எடுத்து வந்தனர். தொடர்ந்து பங்கு பாதிரியார் அகஸ்டின் தலைமையிலான 30 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கொடியை புனிதம் செய்த பின், ஆரோக்கிய மாதா தேவாலய முகப்பில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்