தங்காவதீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தங்காவதீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் புத்தேரி தெருவிலிருந்து கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லும் வழியில் தங்காவதீஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடப்பெற்ற தலமாக இது விளங்குகிறது. இந்த கோவிலுக்கு அருகே உள்ள குளம் தற்போது சுற்றுச் சுவர் இல்லாமல் சேதமடைந்துள்ளது. எனவே, இக் கோவில் குளத்தை துார்வாரி, கரைகளில் கற்கள் பதித்து சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்