சிதம்பரம்: ஆத்மநாதர் கோவிலில், திருவாசக எழுத்து வேள்விநடைபெற்றது.
சிதம்பரம், வேங்கான் தெரு, திருப்பாற்கடல் மடத்தில் உள்ள ஆத்மநாதர் கோவிலில், மாணிக்க வாசக பெருமான்‘திருவாசகத்தை’ சொல்ல, நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதியதாக ஐதீகம்.
இதையொட்டி, நேற்று மாணிக்கவாசகர் பர்ணசாலையில், திருவாசகம் எழுத்து வேள்வி, நேற்று நடந்தது. இந்து ஆலய பாதுகாப்புகுழு தலைவர் செங்குட்டுவன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில்,ஆயிரத்துக்கும் சிவனடியார்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று திருவாசகம் எழுதினர். மேலும் பலர் திருவாசகம் படித்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த சிவனடியார்சிவக்குமார் ஏற்பாட்டின் பேரில், நேற்று, இதே நிகழ்வு, உலகம் முழுவதும், 22 நாடுகளில், ஒரே நேரத்தில் திருவாசகத்தின், 10 பாடல்கள் எழுதும் வேள்வி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில், புலவர் கருணாநிதி, உமா, பாலசுப்பிரமணியன், வெங்கடேச தீட்சிதர்,ஆசிரியர் அருணாசலம், சவுந்தரலட்சுமி, புவனகிரி ராஜாமணிகதர்சன் மற்றும் கோவில் நிர்வாகி பசவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக ஆத்மநாதர் மற்றும் குரு நமச்சிவாயர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.