பொங்காளியம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது எப்போது?



பல்லடம்: பல்லடம் பொங்காளி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது எப்போது? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், பிரசித்தி பெற்ற பொங்காளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொங்காளி அம்மனை பல்லடத்தின் காவல் தெய்வமாகவே பக்தர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் தான் இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆட்சிக்காலத்தின் போது, இக்கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்குள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ராஜகோபுரம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.  பல ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, பல்வேறு இடையூறுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதுபோல் கிடப்பில் போடாமல், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, பொங்காளியம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்