அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் குரு பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்



அயோத்தி; குரு பூர்ணிமா (வியாச பூர்ணிமா) நாளான நேற்று ஜூலை 29 அன்று, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் பகவான் ஸ்ரீ ராமரின் நாமத்தை உச்சரித்தும், ராம கோஷம் எழுப்பியும், பக்தியுடன் வழிபட்டனர். இயற்கையின் பசுமை போர்த்திய சூழலில், சிராவண மாதத்தை வரவேற்கும் விதமாக, பரந்து விரிந்த ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் வளாகம் பசுமை நிற அலங்காரங்களுடன் மிளிர்கிறது. அயோத்தி தாமில் சிராவண மாதத்தில் நடைபெறும் ஜூலா மேளா (ஊஞ்சல் திருவிழா) உலகப் புகழ் பெற்றது. புனிதமான சிராவண மாதத்தின் பசுமையான அழகை வரவேற்கும் வகையில், பரந்து விரிந்த ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் வளாகமும் துடிப்பான பசுமை நிறங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்