உடுமலை: உடுமலை தில்லை நகர் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில், குருபூர்ணிமா மற்றும் 13ம் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை ஸ்ரீ கணபதிேஹாமம், தத்தாத்ரேயர் ேஹாமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம் மற்றும் ஆஞ்சநேயர் ேஹாமம் நடந்தது. தொடர்ந்து சீரடி ஆனந்தசாயி நாதருக்கு, 108 வலம்புரி சங்காபிேஷகம், 16 வகை சிறப்பு அபிேஷகங்கள் நடைபெற்றது. மதியம்பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணி முதல் திருவிளக்கு பூஜை, இரவு, 7:00 மணிக்கு ஸ்ரீ சத்யநாராயண பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.