சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
சோழம்பட்டு கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்,பூஜைகள் நடந்தது. மேலும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன் தினம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.