சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரியுடன் நிறைவு



பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா தீர்த்தவாரி நடந்து. கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.


பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவம் ஜூலை 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. வைகை ஆற்றின் கரையில் வடக்கு திசை நோக்கி நித்திய பரமபத வாசனாக மூலவர் பரமஸ்வாமி உள்ளார். பிரம்மோற்ஸவத்தில் ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல், ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் நடந்தது. இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் தீர்த்தவாரி மண்டபம் முன்பு எழுந்தருளினார். அங்கு தீர்த்தவாரி பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அப்போது 12 வகையான நெய்வேத்தியங்கள் பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க, சங்கு, சேகண்டி இசைக்க, பாகவதர்களின் பஜனை, வேத பாராயணம் ஒலிக்க, சிலம்பம் சுற்றி, வாள் வீசியபடி பக்தர்கள் முன் செல்ல பெருமாள் கோயிலை சுற்றி வலம் வந்தார். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு சன்னதி கருடனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் கருட கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்