உதிரகாளி ருத்ரமாதேவி திருவிளக்கு பூஜை



ராமநாதபுரம்: ராமநாதபுரம் லட்சுமிபுரம் மேல் கரையில் அமைந்துள்ள உதிரகாளி ருத்ரமாதேவி ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது.

மகாசக்தி உதிர காளி ருத்ரமாதேவி ஆலயத்தின் 11-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா ஜூலை 29ல் துவங்கியது.

நேற்று முன்தினம் ஆலயத்தில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி அம்மனை வழி பட்டனர்.

தொடர்ந்து நேற்று சங்காபிஷேகம் நடந்தது. இன்று வளையல் சூடுதல் மற்றும் அம்பாள் ஊஞ்சலாடுதல் நடக்க வுள்ளது.

நாளை ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பால்குடம், தீச்சட்டி எடுக்கும் நிகழ்வு நடக்கிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்