மானாமதுரை தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆடி பூஜை



மானாமதுரை: மானாமதுரை தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் கோயில் கிடா வெட்டு அன்னதான பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை தல்லாகுளத்தில் சாலையின் நடுவே ஊரின் காவல் தெய்வமான தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு செவ்வாய்,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் ஆடு,கோழிகளை பலியிட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.நேற்று ஆடி மாத பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சார்பில் நடைபெற்ற கிடாவெட்டு பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தயிர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்