ஓம் சக்தி கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா



சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், 41ம் ஆண்டு ஆடிப்பூரம் திருவிழா, வரும் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடக்கிறது.

முதல் நாளான ஆக., 14ல், காலையில் சக்தி கொடியேற்றி, காப்பு கட்டப்படுகிறது. ஓம் சக்தி அம்மன், பிரத்யங்கிரா தேவிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்படும்.

இரண்டாம் நாளான 15ல், காலையில் தேசிய கொடியேற்றப்படும். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு இனிப்பு, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படும். மூன்றாம் நாளான 16ல், மதியம் கஞ்சி, கூழ்வார்த்தல், அம்மன் வர்ணிப்புடன் சிறப்பு பூஜை; பக்தர்களுக்கு அன்னதானம்; மாலையில் தீ சட்டிகள், வேப்பிலை, கரகங்கள், பால் குடம், பூக்கரத்துடன் ஓம் சக்தி, பிரத்யங்கிரா தேவி, வாராஹி அம்மன் தேர் ஊர்வலம் நடக்கிறது. இரவில் மஹா மங்காளரத்தி, பக்தர்கள் அன்னதானம் வழங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிறுவனர் சக்தி சண்முகம், சக்தி சுந்தரி, கோவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்