திருவாலங்காடு ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்கும் பணிகள் மும்முரம்



திருவாலங்காடு: நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, பாகசாலை ஆதிகேசவபெருமாள் கோவிலை சீரமைக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.


திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை கொசஸ்தலை ஆற்றங்கரையின் தென்புறத்தில் அமைந்துள்ளது ஆதிகேசவ பெருமாள் கோவில். இந்த கோவில், சோழர் காலத்தில், 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாளுக்கு, பிரம்மோத்சவத்தின் போது, இந்த கோவிலில் இருந்து பூஜை பொருட்கள் கொண்டு சென்று, அபிஷேகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில், பல ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் உள்ளது. பாகசாலை கிராம மக்கள் திருப்பணி கமிட்டி அமைத்து, இந்த கோவிலை சீரமைக்க திட்டமிட்டனர். ஆனால், போதிய நிதி ஆதாரம் கிடைக்காததால், அந்த முயற்சி பாதியில் கைவிடப்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த 26ம் தேதி செய்தி வெளியானதை அடுத்து, திருவள்ளூர் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கோவிலை சூழ்ந்திருந்த செடி, கொடிகள் மற்றும் மரங்களை அகற்றி, சுவர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்