கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 355ம் ஆண்டு ஆராதனை விழாவின் 2ம் நாளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 355ம் ஆண்டு 3 நாள் ஆராதனை விழா நேற்று துவங்கியது. இன்று காலை சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது.
ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு ஸ்வஸ்தி பல மந்த்ராட்சதை நடந்தது. நாளை (31ம் தேதி) காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம், தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு ஸ்வஸ்தி பல மந்த்ராட்சதை நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.