ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரத்தில் ஏகாம்பர சிவன் கோயில் உள்ளது. சோமவாரத்தை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு மூலவருக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை பாடினர். உலக நன்மைக்கான அர்ச்சனை செய்யப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் விஸ்வ கம்மாளர் சமுதாய மக்கள் செய்திருந்தனர்.