கோவைபுதூர் ராகவேந்திரர் மடத்தில் ஆராதனை விழா கோலாகலம்



கோவை; கோவை புதூரில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி மடத்தின் கிளை ராகவேந்திரர் மடத்தில்  நான்கு நாள் வைபவம் கடந்தவெள்ளி கிழமை அன்று துவங்கியது இதன் முதல் நிகழ்வாக சத்தியநாராயண பூஜை கோ பூஜை ஆகியன நடந்தது. இரண்டாம் நாள் காலை நிர்மால்ய தரிசனம் பஞ்சாமிர்த அபிஷேகம் உபன்யாசம் கனகாபிஷேகம் மகா தீப ஆராதனை  நடந்தது. அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை இதே போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன செப்டம்பர் 1 செவ்வாய் கிழமை நிறைவு நாளில் ரத உற்சவம் மந்திர புஷ்பம் ஆகையத்துடன் ஆராதனை நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றனர் ஆராதனைகள் நடக்கும் நான்கு நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ராகவேந்திரா சுவாமிகள் மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் குரு ராகவேந்தரின் பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு குரு ராகவேந்திரர் காட்சி அளித்தார்.


கிபி 1595-ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரியில் திம்மண்ணப்பட்ட கோபிகாம்பாள் தம்பதியருக்கு மகனாக வெங்கடநாதர் அவதரித்ததாக ராகவேந்தரின் மரபில் போற்றப்படுகிறது வேங்கடநாதர் சிறு வயதிலேயே அபாரமான அறிவாற்றலும் வேதம் மற்றும் சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தியவர் தனது தந்தையின் மறைவுக்கு பிறகு மதுரையில் தனது மைத்துனர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மாச்சாரியார் இடம் ஆரம்ப கல்வியை பயின்றார் பிறகு கும்பகோணத்தில் ஸ்ரீ சுசீந்திரதீர்த்தரிடம் வேதாந்தம் இலக்கணம் மற்றும் பல சாஸ்திரங்களை கற்று சிறந்த அறிஞராக திகழ்ந்தார் வேங்கடநாதர் சரஸ்வதி பாய் என்ற பெண்ணை திருமணம் செய்து தனது இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார். தம்பதியர்களுக்கு லட்சுமி நாராயணன் என்ற மகன் பிறந்தார் குடும்பம் வறுமையில் வட்டிய போதும் தனது அறிவையும் கல்வியையும் பணத்திற்காக விற்காமல் பொதுமக்களுக்கு இலவசமாக கல்வியை கற்பித்தார். பகவத் பக்தியிலும் சாஸ்திர பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இவரின் ஞானத்தையும் சாஸ்திர புலனையும் கண்ட ஸ்ரீ சுதீந்திரதீர்த்தர்தனது மடத்தின் எதிர்கால பொறுப்பை ஏற்க அவரை அழைத்தார். ஆனால் வேங்கடநாதர் தன் மனைவியும் மகனும் இருப்பதால் முதலில் தயங்கினார். பின்னர் இறையருள் மற்றும் குருவின் ஆணையை ஏற்று இல்லற பொறுப்புகளை முறையாக நிறைவேற்றி சன்னியாசம் ஏற்று ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்ற திருநாமத்தை பெற்றார்.


பின்னர் மடத்தின் பீடாதிபதியாக இருந்து வேதாந்த ஞானத்தையும் பக்தியையும் தர்மநரியையும் உலகெங்கும் பரப்பினார் அவருடைய வாழ்வில் நிகழ்ந்ததாக பக்தி மரபில் போற்றப்படும் பல அருள் நிகழ்வுகள் அவரது மகிமையை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்கின்றன பக்தி மரபில் ஸ்ரீ ராகவேந்திர பிரகலாதரின் மறுபிறவி என்றும் சங்கு கர்ணனின் அவதாரத தொடரில் வந்த மகான் என்றும் போற்றப்படுகிறார் கிபி 1671 ம்ஆண்டு ஸ்ராவணமாதம்  கிருஷ்ணபட்ச துவிதியை திதியில் துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்துள்ள மந்த்ராலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராகவேந்திரர்  பிருந்தாவன பிரவேசம் செய்தார் உருவானவர். தனது அருள் வாழ்வை பிருந்தாவனத்தின் மூலம் தொடர்ந்து புனித நாள் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் அவரைப் போற்றுகின்றனர் அவர் இறுதியாக பக்தர்களுக்கு உபதேசம் அருளி தியானத்தில் ஆழ்ந்து ஜெபமாலையுடன் பத்மாசனத்தில் அமர்ந்து பிருந்தாவனப் பிரவேசம் செய்ததாக மடத்தின் வரவு கூறுகிறது வருடம் தோறும் நடைபெறும் ஸ்ரீ ராகவேந்திரரின் ஆராதனை மகோத்சவம் அவரது பிருந்தாவனப் பிரதேசத்தை நினைவு கூறும் புனித நிகழ்வாகும். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆராதனையில் குரு பூஜை அபிஷேகம் பஜனைகள் பாராயணம் அன்னதானம் என  பக்தர்கள் தங்களை இறை பணியில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். குரு ராகவேந்தர் மக்களுக்கு உணர்த்தும் வாழ்வியல் என்னவென்றால் நேர்மையான வாழ்க்கை நல்ல சிந்தனையை உருவாக்கும் கடமையைச் செய்வோம் பலனை இறைவனிடம் விட்டுவிடுவோம் மனிதனுக்கு செய்யும் உண்மையான சேவையே இறைவனுக்கு செய்யும் சேவையாகும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது வேங்கட நாதராக இனிய பிறந்தநாள் உயர்ந்து உருவாக விளங்கி ராகவேந்திரராக அருள் புரிந்து மந்திராலயம் பிருந்தாவனத்தில் பக்தர்களுக்கு தினமும் அருள் புரியவும் மகானாக குரு ராகவேந்திரர் இருக்கிறார் அவரை நம்பியவர்களை நல்ல வாழ்க்கை கிடைப்பதாக பக்தர்கள் நினைக்கின்றனர் துன்பங்கள் நீங்கி நோய்கள் நீங்கி மனக்கவலைகள் நீங்கி நல்ல எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் அமைதி நிலவி வாழ்வில் தர்மமும் பக்தியின் செழிக்க குரு ராகவேந்திரனை அனுதினமும் வழிபடுவோம் என்கிறது புராணங்கள்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்