செங்கல்பட்டு மரகத தண்டாயுதபாணி கோவிலில் பல கோடி மதிப்புள்ள முருகன் சிலை திருட்டு



செங்கல்பட்டு: செங்கல்பட்டு பெருங்கருணை கிராமத்திலுள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலில் பல கோடி மதிப்பிலான மரகத முருகன் சிலை திருட்டப்பட்டுள்ளது. ; போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


செங்கல்பட்டு அருகே உள்ள பெருங்கருணை கிராமத்தில் இருக்கும் மரகதத்தினால் ஆன முருகர் கோயில் உள்ளது. காஞ்சி மஹாபெரியவர். ஒருமுறை இவர் இங்கு வந்திருந்தபோதுதான், ‘நடுபழநி’ என்ற பெயரை இக்கோயிலுக்கு சூட்டினார். கோயிலுக்கு பின்புறம் 45 அடி உயரத்தில் மலேசியா பத்துமலை முருகனும் காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் பல கோடி மதிப்புள்ள மரகத தண்டாயுதபாணி சிலை திருட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 அடி உயமுள்ள மரகத சிலையை நள்ளிரவில் கோயிலின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், மூலவர் சிலையை திருடி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்