மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா குடமுழுக்கு விழாவில் இன்று ஆடி வீதி, கம்பத்தடி மண்டபத்தில் நவக்கிரக ஹோமம், (நவகோள் யாக வேள்வி) திசா ஹோமம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்., 17ல் நடக்கவுள்ள நிலையில், நேற்று மஹா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. விழாவில் இன்று ஆடி வீதி, கம்பத்தடி மண்டபத்தில் நவக்கிரக ஹோமம், (நவகோள் யாக வேள்வி) திசா ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து திசைக்காவலர் வழிபாடு த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, திருமுறை விண்ணப்பம், தீபாராதனை, திருநீறு திருவமுது பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. சித்திரை வீதி, கம்பத்தடி மண்டபத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை ப்ரவேச பலி (எண் திசை வழிபாடு), ரக்ஷோக்ன ஹோமம்) திருமுறை விண்ணப்பம், தீபாராதனை, திருநீறு திருவமுது பிரசாதம் வழங்குதல் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் செப்.17 காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக கோயில் பரிவார மூர்த்திகளுக்கு செப்.,16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.