ராமர் கல் எனக் கூறி பவளப் பாறைகள் பெயர்ப்பு : இடியும் தருவாயில் தனுஷ்கோடி சர்ச்



ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் சர்ச்சில் உள்ள பவளப் பாறைகளை சிலர் பெயர்த்து சுற்றுலா பயணிகளிடம் ராமரின் கல் என விற்பதால், இடியும் தருவாயில் சர்ச் உள்ளது.


1914ல் ஆங்கிலேயர்கள் சென்னை டு தனுஷ்கோடி வரை போட் மெயில் ரயில் போக்குவரத்தை துவக்கினர். அக்கால கட்டத்தில் தனுஷ்கோடி கடலில் மிதந்து கரை ஒதுங்கும் பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்பு கலவைகள் மூலம் மாதா சர்ச் அமைத்தனர். இங்கு 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி உள்ள ரயில்வே ஸ்டேஷன், தபால் நிலையம், தங்கும் விடுதிகள் இடிந்து தரைமட்டமானது. இதில் மாதா சர்ச் மேற்கூரை இடிந்து போனாலும், சுற்றுச்சுவருடன் கம்பீரமாக காட்சியளித்தது.  வரலாற்று அரிச்சுவடாக உள்ள இந்த சர்ச்சை தற்போது வரை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். ஆனால் ஒருசிலர் சர்ச் கிழக்கு, தெற்கு சுவரில் உள்ள பவளப்பாறைகளை பெயர்த்து எடுத்து, தனுஷ்கோடி முதல் இலங்கை வரை ஸ்ரீ ராமர் அமைத்த பாலத்தின் மிதக்கும் கல் இதுதான் எனக் கூறி, வடமாநில சுற்றுலா பயணிகளிடம் ஒரு கல்லை ரூ.1000, 2000க்கு விற்கின்றனர். இதனால் சர்ச் முழுவதும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பவளப்பாறைகளை பெயர்க்கும் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுத்து, சர்ச்சை புதுப்பித்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து சுற்றுலாவை மேம்படுத்த முன்வர வேண்டும்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்