திருவண்ணாமலை, தாமரை குளத்தில் கிரெயின் மூலம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. குளத்தில் ஏராளமான பக்தர்கள் களிமண் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்தனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரமாண்ட விநாயகர் சிலைகள் அமைத்து பக்தர்கள் வழிபட்டனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. தொடர்ந்து தாமரை குளத்தில் கிரெயின் மூலம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதேபோல் செங்கம் சிங்காரப்பேட்டை ஏரி, வந்தவாசி ஐந்துக்கண் பாலம், போளூர் கூவூர் ஏரி உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.