கமுதி அருகே இலந்தை முள்வேலியில் படுத்து பெண் பக்தர் அருள்வாக்கு



கமுதி: கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு பெண் பக்தர் ராஜேஸ்வரி இலந்தை முள்வேலியில் படுத்து மக்களுக்கு அருள்வாக்கு கூறினார்.


கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம்,தீபாரதனை, சிறப்புபூஜை நடந்தது.காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம்,அக்னிசட்டி,சேத்தாண்டி வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.அழகு வள்ளியம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருள்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது.பொங்கல் வைத்து மக்கள் வழிபட்டனர். பெண் பக்தர் ராஜேஸ்வரி இலந்தை முள்வேலியில் படுத்து மக்களுக்கு அருள்வாக்கு கூறினார்.தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முள்வேலியில் படுத்து அருள்வாக்கு கூறி வருகிறார்.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை செங்கப்படை கிராமமக்கள் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்