ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அரங்கநாத பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சி: சிங்கவரம் கிராமத்தில் மலை மீதுள்ள ரங்கநாதர் கோவிலில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சி: கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
வெங்கட்ரமணர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கும், பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடாஜலபதிக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
சின்னசேலம்: சின்னசேலம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
சின்னசேலம் பெருந்தேவி நாயிகா, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநித்ய கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
அதேபோல் அண்ணா நகர் தன்வந்திரி பெருமாள், திரு.வி.க.நகரில் கலி வரதராஜ பெருமாள், கல்லாநத்தம் அடி பெருமாள் பெருமாள், சின்ன திருப்பதி மலை மீது உள்ள கஜகிரி சீனிவாச பெருமாள், ராயப்பனுார் கலியபெருமாள், தாகம்- தீர்த்தாபுரம் வரதராஜ பெருமாள் உட்பட சுற்றுப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.