சுட்டெரிக்கும் வெயில்; ராமேஸ்வரத்தில் பக்தர்கள் அவதி



ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் சூப்பர் எல்-நினோ சுட்டெரிப்பதால் வெப்ப சலனத்தில், பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.


இந்தாண்டு கோடை சீசனில் தென்மேற்கு பருவமழை பெய்யாமல், வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகம் முழுவதும் நிலவும் வெயில் தாக்கத்தினால் மக்கள் பாதிக்கின்றனர். இந்த தட்பவெப்ப மாறுபாட்டை விஞ்ஞானிகள் சூப்பர் எல்-நினோ என தெரிவிக்கின்றனர். இந்த சுட்டெரிக்கும் வெயிலினால் நிலவும் கடும் வெப்ப சலனத்தினால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் இன்றி நடந்து செல்லுகையில் பெரிதும் அவதிபடுகின்றனர். இதில் முதியவர்கள், பெண்கள் சிலர் சுட்டெரிக்கும் வெயிலில் தாக்கு பிடிக்க முடியாமல், மயக்கம் அடைகின்றனர். எனவே நான்கு ரதவீதியில் நகராட்சி அமைத்த குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பி பக்தர்களின் தாகம் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்