திருத்தணி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை



பகிர்க copied

திருத்தணி: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி, திருத்தணி விஜயராகவ பெருமாள் கோவிலில், இன்று காலை 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


திருத்தணி அடுத்த பொன்பாடி கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், இன்று காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


இரவு 8:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், திருத்தணி தாலுகாவில் உள்ள பெருமாள் மற்றும் பஜனை கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் உத்சவம் நடந்தன.


ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், பிராமண தெருவில் உள்ள அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்