குன்றத்து கோயில்களில் அக்.11 ல் நவராத்திரி விழா



பகிர்க copied

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா அக். 11 முதல் அக். 20 வரை நடக்கிறது.

கோயில் விசாக கொறடு மண்டபத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள் பாலிப்பார். அக். 11ல் ராஜராஜேஸ்வரி, அக். 12ல் நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், அக். 13ல் ஊஞ்சல், அக். 14ல் பட்டாபிஷேகம், அக். 15ல் திருக்கல்யாணம், அக். 16ல் தபசுக் காட்சி, அக். 17ல் மகிஷாசுரவர்த்தினி, அக். 18ல் சிவபூஜை, அக். 19ல் சரஸ்வதி பூஜை அலங்காரங்களில் அம்மன் அருள் பாலிப்பார்.

அக். 20ல் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கக் குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

* திருப்பரங்குன்றம் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராஹி அம்மன் ஆலயத்தில் அக். 11ல் சைலபுத்ரி, அக். 12ல் பிரம்மச்சாரிணி, அக். 13ல் சந்திரகாந்தா, அக். 14ல் கூஷ்மண்டா, அக். 15ல் ஸ்கந்தமாதா, அக். 16ல் காத்யாயனி, அக். 17ல் காளராத்திரி, அக். 18ல் மஹா கவுரி, அக். 19ல் சித்திதாத்ரி அலங்காரங்களில் அம்மன் அருள் பாலிப்பார். அக். 20ல் மஹா அபிஷேகம், சந்தனக்காப்பு, ஊஞ்சல் சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.

* திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அக். 11 முதல் அக்.20 வரை தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிப்பார்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்