புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைதேர்தல் இன்று நடப்பதையொட்டி, முதல்வர் ரங்கசாமி வேட்டைக்காரன்புதுார் அழுக்குசாமி கோவிலில் நேற்று இரவு வழிபாடு செய்தார்.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி தொடர் பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதுார் அழுக்குசாமி கோவிலுக்கு புறப்பட்டு, இரவு 9:00 மணிக்கு சென்றடைந்தார். 10:30 மணி வரை வழிபாடு செய்தார்.
அப்போது தொகுதியில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை துண்டு சீட்டுகளாக வைத்து பூஜை செய்து வழிபட்டார். பின் அங்கிருந்து புறப்பட்டார்.
புதுச்சேரியில் எப்போது தேர்தல் வந்தாலும் முதல்வர் ரங்கசாமி வேட்பாளர்கள் தேர்வு செய்வது, வேட்பு மனுக்களை சேலம், புதுச்சேரி அப்பா பைத்தியசாமி கோவிலில் வைத்து வழிபடுவார்.
பின் வேட்டைக்காரன்புதுார் பகுதியில் உள்ள அழுக்குசாமி கோவிலில் வழிபடுவது வழக்கம்.
அதன்படி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் அசோக் ஆனந்த் வேட்பு மனுவை புதுச்சேரி அப்பா பைத்தியசாமி கோவிலில் வைத்து பூஜை செய்த முதல்வர் ரங்கசாமி, நேற்று அழுக்குசாமி கோவிலில் பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.