கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி இந்திலி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் செவ்வாய் கிழமையொட்டி, சுவாமிக்கு இன்று காலை 10:30 மணிக்கு வாசணை திரவியங்களால் மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பயம் நீங்கி மன அமைதியும் தைரியமும் பெறவும், செவ்வாய் தோஷம் நிவர்த்திக்காவும் முருகப்பெருமானுக்கு சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் செய்து வைத்தார். சிறப்பு அலங்காரத்தில் முருகன் பகதர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.