காரைக்கால்: திருநள்ளாறு கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து பகவனை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் இன்று புரட்டாசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.முன்னதாக நந்தி பகவானுக்கு பால். மஞ்சள். தயிர். சந்தனம். தேன் உள்ளிட்ட 16 வகையான திரவங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. மேலும் தேய்பிறையில் நந்தி பகவானை வழிபட்டால் சனி தோஷம் கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தீரும் என்று அதிகம் இந்நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீன கட்டளை விசாரணைஸ்ரீமத் சட்டநாத ஸ்வாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.