ராஜபாளையம்: ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் கருப்பஞானியார் கோயிலில் ஜீவ ஐக்கிய தினத்தை முன்னிட்டு முப்பழ பூஜை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு 10 மணிக்கு முப்பழ பூஜையும் 11:30 மணிக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர், முருகன், கால பைரவர், பிரம்மா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பூஜையும் மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைவர் வைத்தீஸ்வரன், தர்மகர்த்தா பழனிச்சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.