அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டது. உற்சவரான அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் உள்பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என கோஷம் எழுப்பினர். அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.