இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா



பகிர்க copied

புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா நாளை துவங்குகிறது.


புதுச்சேரி - திண்டிவனம் சாலை, இரும்பை குபேர் நகரில் அமைந்துள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா நாளை 10ம் தேதி துவங்கி, வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. அதனையொட்டி, தினமும் காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, தினமும் இசை மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு அம்பாளுக்கு மகா சாந்தி அபிேஷகம் நடக்கிறது. 22ம் தேதி மாலை 6:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்துள்ளது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்