பேரூர் ஆதின மடத்தில், மகம் நாள் வழிபாடு மற்றும் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 102வது பிறந்தநாள் வழிபாடு நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார் கலந்து கொண்டனர்.
சிதம்பர அடிகளார் நூலகத்தின் சார்பில், வழி இலக்கண நிறைகடல் கந்தசாமி பிள்ளை வாழ்க்கை குறிப்பு மற்றும் நற்சிந்தனைகளே நல்முத்துக்கள் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.