லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவ விழா



பகிர்க copied

இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இதையடுத்து தினந்தோறும் ஏராளமான பெண்கள் கோயில் முன்பாக கும்மி கொட்டியும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் அம்மனை வழிபட்டு வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் முலைப்பாறி ஓடுகளை தலைச் சுமையாக சுமந்து கொண்டு கிராமத்தை சுற்றி வலம் வந்து கீழாயூர் வினை தீர்த்த அம்மன் கோயில் குளத்தில் முளைப்பாரிகளை கரைத்தனர்.பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்