ராஜபாளையம் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி தேரோட்டம்



பகிர்க copied

சேத்துார்: ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்துார் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் தேரோட்ட திருவிழா நடந்தது.


அக்.1-ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலை தேர் திருவிழா நடந்தது. தேரினை நான்கு ரத வீதிகள் வழியே பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு வந்தனர். தேருக்கு பின் பக்தர்கள் கும்பிடு கரணம் போட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


* மேலுார் துரைச்சாமிபுரத்தில் முப்புடாதி அம்மன் கோயில் திருவிழாவிலும் மாலை 6: 30 மணிக்கு பூக்குழி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பூ இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்