நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?; நாளை கொலு வைக்க நல்ல நேரம்..!



பகிர்க copied

புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் வீடுகளில் கொலு பொம்மை வைத்து பெண்கள் வழிபாடு நடத்துவர். ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் இப்பூஜையில் கலந்து கொள்வர். பாடல்கள், சுலோகங்கள் சொல்லி வழிபடுவர். இந்த ஒன்பது நாட்களிலும் அம்மனை ஒன்பது அவதாரங்களில் காணலாம். கொலு வைத்து வழிபடுவதன் மூலம், வீட்டில் நல்லது நடக்கும், கெட்டது நீங்கும் என்பது ஐதீகம். வீடுகளில் பல வரிசையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவர். இவை மனித வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது கொலு படியாகும். கொலுவை வழிபடுவதன் மூலம், வீட்டில் நல்லது நடக்கும், கெட்டது நீங்கும் என்பது ஐதீகம். 


நாளை நவராத்திரி கொலு வைக்க நல்ல நேரம் : காலை 10.30 - 11.30 மணி


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்