மஹாளய அமாவாசை, திருப்புவனம் வறண்ட வைகை ஆற்றில் தர்ப்பணம்



பகிர்க copied

திருப்புவனம்: புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க வந்திருந்த ஹிந்துக்கள் தண்ணீரின்றி வறண்ட வைகை ஆற்றை கண்டு ஏமாற்றமடைந்தனர்.


புண்ணிய நகரான திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி இந்துக்கள் வழிபடுவது வழக்கம். அமாவாசை தினங்களில் மறைந்த முன்னோர்கள் பூமிக்கு திரும்புவார்கள், அன்றைய தினம் அவர்களை வழிபட்டால் அவர்களுடைய ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று மஹாளய அமாவாசை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகை ஆற்றினுள் தற்காலிக கொட்டகை அமைத்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். வைகை ஆற்றில் தண்ணீரே இன்றி வறண்டு கிடந்ததால் பக்தர்கள் ஆங்காங்கே கைகளால் குழி தோண்டி பொருட்களை கரைத்தனர். இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் தலைமையில்போலீசார் நான்கு ரத வீதிகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தி பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர். கூட்டத்தை பயன்படுத்தி 30 ரூபாய் பெறுமானமுள்ள தர்ப்பண பொருட்களை 50 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்