உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகல துவக்கம்



பகிர்க copied

மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.


கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி விழா 11 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும். நடப்பாண்டு தசரா விழா, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் இன்று துவங்கியது. காங்., அரசின் முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி ஸ்ரீஅபினவ கவிசித்தேஸ்வர மஹா சுவாமிகள் பகல் 11:50 மணிக்கு, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, விழாவை துவக்கி வைத்தார்.


பின் அவர் பேசுகையில், ‘‘தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும், அரிசியை பதிவிறக்கம் செய்ய முடியாது. விவசாயிகளால் தான் நமக்கு உணவு கிடைக்கிறது. அவர்கள் கடின உழைப்பை மதிக்க வேண்டும். நிலம், நீர், சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு,’’ என்றார். 


முதல்வர் சிவகுமார் பேசும்போது, ‘‘அடுத்த 11 நாட்களுக்கு மைசூரு வழியாக இந்தியா தெரியும். நாட்டின் பாரம்பரிய கண்ணாடியாக விளங்கும் தசரா பண்டிகை, நாட்டின் பெருமையின் சின்னம். தசரா என்பது ஒரு மதத்தின் கொண்டாட்டம் இல்லை. பாரம்பரியம், கலை, கலாசாரம், சமூக நல்லிணக்கம், மக்கள் எண்ணத்தை ஒன்றிணைக்கும் திருவிழா,’’ என்றார். தசராவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியான, சாமுண்டீஸ்வரி சிலையை அம்பாரி மீது வைத்து யானைகள் சுமந்து செல்லும் ஜம்பு சவாரி ஊர்வலம், வரும் 21ம் தேதி மாலை நடக்கிறது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்