உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா: பக்தர்கள் அர்ச்சனை



பகிர்க copied

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.


உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது. நேற்று முன்தினம் துவங்கிய நவராத்திரி திருவிழா வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி ஆசிரமத்தில் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நகரத்தில் விழாவின் சிறப்பம்சமாக முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர். பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு திருத்தலங்களின் சுவாமி திருவுருவங்களுக்கும் தனித்தனி அரங்குகளில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டன இதன் மூலம் ஒரே இடத்தில் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைத்தது. மேலும் திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் தங்களது கைகளாலேயே சந்தனம் அபிஷேகம் செய்து வழிபடுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து நவராத்திரி விழாவிற்கு வருகை தந்த ஏராளமான பக்தர்கள் முருக பெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்து பக்தியுடன் வழிபட்டனர். விழாவில் மஹிஷாஸூர மர்த்தினி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


நவராத்திரி முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு அலங்காரங்களை காணவும், அம்மன் மற்றும் முருகப்பெருமானை தரிசிக்கும் பக்தர்கள் ஆர்வத்துடன் ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். தினசரி நண்பகல் 12 மணிக்கும், இரவு 7 மணிக்கும் என இரு வேலை திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு சந்தன அபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தன அபிஷேகத்தை தொடர்ந்து அர்ச்சனையும் நடக்கிறது. இந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஆசிரமத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஆசிரமம் சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்