பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை நடந்தது.
பொள்ளாச்சி, ஆனைமலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நேற்று முதல் துவங்கியது. இதை தொடர்ந்து இன்று (17ம் தேதி) காலை 10:31 மணிக்கு, மகாகணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், ராமர் ஹோமம், ஆஞ்சநேயர் ஹோமம், கருடாழ்வார் ஹோமம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. இதேபோன்று காட்டம்பட்டிபுதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று காலை முதல், மூலவர் திருமஞ்சனம், அலங்கார பூஜை, கோவிலை சுற்றி உற்சவம் மூர்த்தி பவனி வருதல், மகாதீபாரதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் மற்றும் ஜடாரி ஆசீர்வாதம், அன்னதானம் நடக்கிறது.