நல்லூர் மாதவ பெருமாள் சுவாமிக்கு புரட்டாசி கடைசி சனி சிறப்பு வழிபாடு



பகிர்க copied

வேப்பூர்: புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி, நல்லூர் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி, வேப்பூர் அடுத்த நல்லூர் ஶ்ரீ வில்வனேஸ்வரர் கோவிலில் உள்ள மாதவ பெருமாள் சுவாமிக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை திருமஞ்சன அபிஷேகம் செய்து, அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர், தீபாராதனை நடந்ததில், சுற்றுப்புற கிராம பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்