மைசூரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது: விளக்குகளை காண ஆர்வம்



பகிர்க copied

மைசூரு: தசரா முடிந்தும் மைசூரில் மக்கள் கூட்டம் அலைமோது கிறது. வண்ண விளக்குகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.


மைசூரில் கடந்த 11 ம் தேதி துவங்கிய தசரா நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண, மைசூரில் வசிக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு மற்ற மாவட்டத்தினர் வந்திருந்தனர். இதுதவிர லாட்ஜ்கள், ஹோட்டல்களில் வெளிமாநிலம், வெளிநாட்டினரும் தங்கியிருந்தனர். தசரா முடிந்ததும் ஒரு சிலர் மட்டுமே ஊர் திரும்பிய நிலையில், பெரும்பாலோனார் மைசூரிலேயே தங்கி உள்ளனர். மைசூரு நகர், அரண்மனையில் வண்ண விளக்கு அலங்காரத்தை ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ்., அணை உட்பட எங்கு பார்த்தாலும், சுற்றுலா பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. வரும் 1ம் தேதி வரை, மைசூரு நகரில் வண்ணவிளக்கு அலங்காரம் இருக்கும் என்று, மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளதால், அடுத்த மூன்று நாட்களுக்கு கூட்டம் அலைமோத உள்ளது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்