உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா நேற்று நதிஇம்லி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ராமாயணத்தில், 14 ஆண்டுகள் வனவாசம் முடித்துத் திரும்பும் ஸ்ரீராமரை அவரது தம்பி பரதன் சந்திக்கும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது. ஸ்ரீராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்னன் ஆகியோர் மீண்டும் சந்திக்கும் காட்சியைக் காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். சகோதரர்களின் அன்பு, பாசம், தியாகம் மற்றும் குடும்ப ஒற்றுமையை எடுத்துரைக்கும் இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் இந்தப் பாரம்பரிய விழா, வாரணாசியின் கலாசார மற்றும் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.