ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் துர்கா பூஜை நிறைவு



பகிர்க copied

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் துர்கா பூஜை நிறைவு நாள் விழா நடந்தது.


பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கோயிலில் ஆறு நாட்களாக துர்கா பூஜை, சண்டி பாராயணம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். விழாவில், தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் தேவி ஸ்துதி, ராமகிருஷ்ண பூஜை, துர்கா பூஜை மற்றும் சண்டி பாராயணம் ஆகியவை பக்தி பரவசத்துடன் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக மகா அஷ்டமி மற்றும் மகா நவமி நாட்களில் சிறப்பு ஹோமங்கள் நைவேத்தியங்கள், அன்னை துர்க்கையின் பெருமைகளை விளக்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை ஒட்டி தேவி விசர்ஜனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், சாரதா தேவி நாம சங்கீர்த்தனம், ராமகிருஷ்ணர் பாடிய வங்காள பாடல்களுடன் வழிபாடுகள் நடைபெற்றன.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்